மாரிகால அனர்த்தத்திற்கு தயாராகுவோம் : அக்கரைப்பற்று பிரதேச சபையில் முகம் கொடுக்கும் பணி ஆரம்பித்தது.
இரவு பெய்த அடை மழை காரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அலுமிந்தா குளம், கரடிப்பாலை
வட்டை போன்ற இடங்களில் வெள்ளநீர் தடைப்பட்டதனால் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை முகம் கொடுத்த
விவசாயிகளதும், நாளாந்தம் மீன் பிடிக்கும் மீனவர்களதும் வேண்டுதலுக்கு இணங்க இன்று
ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று (மேற்கு) கமநலச் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்
யு.எல் ஹமீத் அவர்களின் மேற்பார்வையில் அக்கரைப்பற்று பிரதேச சபை அனர்த்தங்களுக்கு
முகம் கொடுக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக்; சபைக்கு
வித்திட்டவர், வித்திட்ட கையோடு 50 வருடங்களுக்கு தேவையான அனைத்து விதமான கனரக வாகனங்களையும்
கொடுத்து இந்த மக்களின் அபிலாசைகளுக்கு உரம் கொடுத்த தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும்,
பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் சபையினுடைய மொத்த நடவடிக்கைகளில்
நல்லவைகளை நல்லவை என்றும், முரண்பாடானதை முரண்பாடென்றும் தைரியமாகச் சுட்டிச் சொல்லும்
சபையினுடைய உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்து கொள்கின்றேன்.
அனர்த்த நிலைகள் எதுவானாலும் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கும் அக்கரைப்பற்று பிரதேச
சபை சாரதி முஹம்மட் நசீர் உட்பட அக்கரைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,
ஊழியர்கள், எப்போதும் நன்றிகளோடு நினைவு கூறப்பட வேண்டியவர்கள். இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில்
அனர்த்தங்களை முகம் கொடுக்க நாங்கள் (பிரதேச சபை) எப்போதும் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
0 Comments:
Post a Comment