செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ நித்தியானந்தா சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நடைபெற்ற திருக்கலியாணத்திருவிழா.
மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ நித்தியானந்தா சிவசுப்பிரமணிய ஆலயத்தில் கந்த சஷ்ட்டி விரதத்தின் இறுதிநாளான திங்கட்கிழமை(31) திருக்கலியாணத்திருவிழா மற்றும் ஊர்வலம் இடம்பெற்றது.
முருகனுக்கான திருக்கலியாணக்கோலம், பெண் பார்க்க செல்லுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சுவாமி ஊர்வலமாக செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கும் சென்று கிராம மக்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழா ஆலயப்பிரதம குரு நா.குணகேந்திர குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment