எங்களுக்கு நடந்த அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோர வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம்.
வேண்டுமென்றே வெறுப்புணர்வைத் தூண்டி அதன் மூலமாக எங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை நாங்கள் ஒரு போதும் மறந்து விடவோ கிடப்பில் போடவோ முடியாது. அவற்றுக்கு நியாயம் கோரி நிற்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் சனிக்கிழமை 26.11.2022 இரவு தவிசாளர் விருது வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசினார்.
ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழீம் தலைமையில் நிகழ்வு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஹக்கீம்,
ஏப்ரில் 21 இன் பயங்கவாதக் கும்பலைப்பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. ஆனால் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கும்பலின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லை நினைவுகூரப்பட வேண்டியதுமில்லை. அந்தப் படுபாதகச் செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எங்களது முடிவு. அவர்கள் மேற்கொண்டது முஸ்லிம் சமூகத்தழிற்கான போராட்டமுமல்ல. அது முழுமையாக எங்களுக்குத் தெரியும்
அதற்குப் பின்னால் வேறு சக்திகள் இருந்ததுதான் உண்மை. அந்த மறை கரங்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அது உலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதற்குப் பின்னாலும் சில பெருந்தேசியவாதக் கழுகுக் கூட்டம் இருந்ததா என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை முஸ்லிம்கள் மீது தூண்டி அதன் மூலமாக ஆட்சியதிகாரத்தை அடைந்து கொள்வதற்குப் பாடுபட்டவர்கள் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் படாதபாடு படுத்தினார்கள்.
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் இவ்வாறு அவர்களது வெறுப்புணர்ச்சி எல்லை கடந்து சென்று விட்டது. இன்னமும் முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிரூபிக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேவையில்லாத விபரீத விளையாட்;டைச் செய்த மறைகரம் சக்தி என்ன என்பது கண்டறியப்பட வேண்டும். அதற்கான நியாயம் நீதி எங்களுக்குக் கிடைத்தாக வேண்டும்;.
இவ்வளவு நாசகார, இனவாத, மதவாத வெறுப்புக்களுக்குப்; பின்னாலிருந்த மறைகரம் என்ன?
முள்ளிவாய்க்கால் சம்பவம் அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை இப்பொழுது சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள்.
எங்களுடைய சமூகத்தின் அப்பாவிகள் நிறையப் பேரைக் கொண்டு போய் இல்லாத பொல்லாத விசயங்களைச் சொல்லி போதாக்குறைக்கு ஜனாஸாக்களையும் போட்டு எரித்தார்கள். இதற்கெல்லாம் என்ன நஷ்ட ஈட்டை அரசாங்கம் தரப்போகிறது? இதனைச் சும்மா விட முடியாது.
நடந்த அநியாயங்களைக் கண்டறிவிதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைனக்கழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கெல்லாம் ஏதொவொரு பொறிமுறையினு+டாக முடிவு காணப்பட வேண்டும்;. அதே நேரம் அடுத்த கட்டமாக வருகிற அரசியல் என்பது வித்தியாசமாபக நடக்கப் போகின்றது.
அந்த வித்தியாசமான அரசியலில் முஸ்லிம் சமூகமாக இருக்கட்டும் தமிழ் சமூகமாக இருக்கட்டும் நாங்கள் எல்லோரும் மிகக் கவனமாகக் காய்நகர்த்தி சரியான இலக்குகளை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். என்னதான் பேசினாலும் துரோகச் செயல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவு காண முடியாது. துரோகத்தைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தைக் கடத்துவதல்ல நோக்கம். தெற்கிலுள்ள சிங்கள சமூகத்தினரும் சிறுபான்மைச் சமூகத்தினரின் கோரிக்கைகள் நியாயமானது என்று நம்புகின்ற அளவக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இதுவென நான் நம்புகின்றேன்.” என்றார்.
0 Comments:
Post a Comment