17 Oct 2022

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இந்தியாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது.

SHARE

 (இ.சுதா)


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இந்தியாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது. 
 கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் "திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்கள்   வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பிசினஸ் குளோபல் இன்டர்நேஷனல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி வைக்கும் நிகழ்வு  சனிக்கிழமை(15) மாலை 3.00 மணியவில் இந்தியா - சென்னையிலுள்ள சஃபாரி கிறான்ற் விடுதியில் இடம்பெற்றது.

இந்தப் பாராட்டு விழாவில் ஆசியாவின் பல பாகங்களிலும் இருந்து சமூக சேவை ஊடாக, கல்வி, சுகாதார மற்றும் பல துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு இந்த 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் சமூக, கல்வி சேவைக்காக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் (திருமதி) நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு இந்த 'வாழ்நாள் சாதனையாளர் 'விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதனால் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் "திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை ஈன்றெடுத்த துறைநீலாவணை மண்ணுக்கு மாத்திரமல்லாது கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை ஏற்பட்டுள்ளது.




SHARE

Author: verified_user

0 Comments: