17 Oct 2022

வாழ் நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக்கொண்டார் சிவஸ்ரீ கிருஷ்ண கவிதாஸ் குருக்கள்.

SHARE

(இ.சுதா)


வாழ் நாள் சாதனையாளர் விருதினை  பெற்றுக்கொண்டார் சிவஸ்ரீ கிருஷ்ண கவிதாஸ் குருக்கள்.
துறைநீலாவணையைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வராவார்.  அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமத்தில் இருந்து தொலைவில் உள்ள தாமரைக்குளம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கவிதாஸ்  ஆரம்பப் படிப்பினை கஞ்சிகுடிச்சாறு கணேசா வித்தியாலயத்திலும் உயர்தர படிப்பினை திருக்கோயில் மெ.மி.த.க.பாடசாலையிலும் கற்றதோடு மேலதிக படிப்பினை  இந்தியாவில் உள்ள பிள்ளையார் பட்டியில் உள்ள வேத பாடசாலையில் வேதங்களைக் கற்ற ஒருவராவார்.

இவருடைய சமய சமூக பணிகளை கருத்தில் கொண்டு தேச பந்து தேச கீர்த்தி , தேச மானிய மற்றும் தேச சக்தி ஆகிய. விருதுகளை  பெற்றதோடு இவர் சிறுவர் தொடர்பான பிரிவு மற்றும் சிவில் பாதூகாப்பு பிரிவிலும் இனைந்து பல சமூக சேவைகளை செய்து வருவதோடு தற்போது திருகோணமலை சம்பூர் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் சமய சேவையினை செய்து வருகின்றார்.

இவருடைய சமய மற்றும் சமூக சேவையினை  கருத்தில் கொண்டு இந்திய அரசினால் வழங்கி கௌரவிக்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்ற இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளம்  சாதனையாளராக சிவஸ்ரீ கிருஷ்ண. கவிதாஸ் குருக்கள் திகழ்கின்றார். இவருக்கான. வாழ்நாள் சாதனையாளர் எனும் இவ் விருதினை இந்திய அரசு 15.10.2022. அன்று வழங்கி கௌரவித்தது.



SHARE

Author: verified_user

0 Comments: