காட்டு யானைகள வீட்டுக்கு வந்து தாக்கியத்தில் முதியவர் பலி.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிவுள்ள முனைத்தீவு கிராமத்திற்குள் திங்கட்கிழமை(17) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் 2 கட்டுயானைகள் உட்புகுந்துள்ளன.
இந்நிலையில் தமது வீட்டில் கணவன் மனைவி ஆகிய இரு முதியவர்களும், உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வெளியில் ஏதோ சத்தம் கேட்கின்றது, வளவினுள் மாடுகள் உட்புகுந்து விட்டதாக நினைத்துக் கொண்டு கையில் தடி ஒன்றையும் எடுத்துக் கொண்டு வெளியில் வாசலுக்கு வந்துள்ளார். அதேவேளை அவரது வாசலில் நின்ற காட்டுயானைகளில் ஒன்று அந்த முதியவரைத் தாக்கி அடித்துள்ளது. இதில் அவர் இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு காட்டு யானைகள் திங்கட்கிழமை(17) அதிகாலை 2.245 மணியளவில் இவ்வாறு முனைத்தீவுக் கிராமத்தினுள் புகுந்து அங்கிருந்த வாழை, மா, மற்றும் மதில் ஒன்றையும், சேதப்படுத்தும் காட்சி அருகிலிருந்து கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. எனினும், யானை இவ்வாறு முதியவரையும் தாக்கி விட்டுச் சென்றுள்ளது. இதில் முனைத்தீவுக் கிராமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய கா.சங்கரப்பிள்ளை என்பவரே பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவமறிந்த பொஸிசார் மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்த்தர் உள்ளிட்ட பலரும் இஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளையும், மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment