மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா 2022.
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயத்திருவிழா திருவிழா 30.09.2022 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அருட்தந்தை லெபோர்ட் சுதன் அவர்களுடைய தலைமையில் அருட் தந்தை நிர்மல் சூசை மற்றும் அருட்தந்தை அம்போர்ஸ் அடிகளார் போன்ற அருட்தந்தையர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இறுதி நாள் உற்சவமான ஞாயிற்றுக்கிழமை(09) ஊர்வலம் இடம்பெற்று அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பல கீதங்கள் இசைக்கப்பட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment