2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது மாகாண மட்டத்தில் போரதீவுப் பற்றுக்கு முதலாம்இடம்.மேற்படி விருது வழங்கும் நிகழ்வு 30.09.2022 ஆம் திகதி சமூகப் பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் 2021இற்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது.
ஓய்வூதிய உரித்தற்ற பொது மக்களுக்கு 60 வயதின் பின் ஓய்வூதியம் ஒன்றினை கிடைக்கச் செய்யும் சமூக வேலைத் திட்டம்.
இத்தகைய வேலைத்திட்டம் பொதுமக்களை சென்றடைய வழிகாட்டல்களும், இலக்குகளும் தனித்தனியாக வகுக்கப்பட்டது. அதனை நேர்ச்சிந்தனையுடன் புரிந்து கொண்டு செயற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், துறைசார் வெளிக்கள உத்தியோகத்தர்கள், திட்டமிடல் வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
போன்றோரின் விடாமுயற்சியே இவ்விருதுக்கு முக்கிய காரணம். தற்போது மக்கள் அதன் பலாபலனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
அவ்உத்தியோகத்தர்களுக்கு இவ் விருதினை சமர்ப்பிப்பதில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் போதீவுப் பற்று பிரதேச செ யலகம் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதில்,அகில இலங்கை ரீதியாக 5ஆம் இடத்தையும், மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும், பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment