12 Sept 2022

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ரோரை அழைத்துச் சென்ற 5 வர் மட்டக்களப்பில் கைது

SHARE

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ரோரை அழைத்துச் சென்ற 5 வர் மட்டக்களப்பில் கைது -படகுகள் இயந்திரங்கள் கைப்பற்றல்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற நபர்களை படகுகள் மூலம் அழைத்துச்சென்ற ஐவரை மட்டக்களப்பு நாலவலடி கடலில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(11)  அதிகாலை ஒரு மணியளவில்  களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி ஐ.பி.தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்துப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 87பேர் கடற்படையினரால் திருகோணமலை நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனா.இவர்களை ஏற்றிச் சென்றுவிட்டு திரும்பும்  வழியிலேயே குறித்த படகோட்டிகளும் உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பு நாவலடியில் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 4 படகுகள் இதற்குரிய இயங்திரங்கள் உட்பட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


 















SHARE

Author: verified_user

0 Comments: