12 Sept 2022

ஐஸ் போதைப்பொருள் கடத்திய நபர் பொலிசாரால் கைது! பெருமளவு ஐ மீட்பு.

SHARE

ஐஸ் போதைப்பொருள் கடத்திய நபர் பொலிசாரால் கைது! பெருமளவு ஐ மீட்பு.

மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து காத்தான்குடிக்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய நபரை காத்தான்குடி பொலிசார் சனிக்கிழமை (10)  மாலை கைது செய்துள்ளதுடன் ஐஸ் போதைப் பொருளையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 10 கிறாமும் 150 மில்லி கிறாம் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய விஷேட பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகார் ரஹீம் அவர்களின் வழ்காட்டலில் விஷேட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளான எம்.ரி.எம்.தாஹா, என்.சந்திரகாஜன் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியை அன்மித்த வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஏறாவூரிலிருந்து காத்தான்குடிக்கு ஐஸ் போதைப் பொருளை கடத்தி வந்த ஏறாவூரைச் சேர்ந்த நபரை கைது செய்ததுடன் குறித்த சந்தேக நபரிடமிருந்து 10 கிறாமும் 150 மில்லி கிறாம் ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: