2 Aug 2022

பிரிந்து நின்றால் இழந்து விடுவோம் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைத் தலைவர் சர்வானந்தன்

SHARE

பிரிந்து நின்றால் இழந்து விடுவோம் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைத் தலைவர் சர்வானந்தன்

எந்தக் கால கட்டமாக இருந்தாலும் பிரிந்து நின்றால் அத்தனை அம்சங்களையும் இழந்து விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என ஏறாவூர்ப் பற்றுபிரதேச சபைத் தலைவர் சின்னத்தம்பி சர்வானந்தன் வலியுறுத்தினார்.

ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தில் கிறிசலிஸ் தன்னார்வ நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற சக சமூகங்களுடனான கலாசார நிகழ்வொன்றில் பங்குபற்றி அவர் உரையாற்றினார்.

பாரதிபுரம் சனசமூக  நிலயத்தில் அதன் தலைவர் எஸ்கமல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 31.07.2022 நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு பல்சமய சிறார்களின் கலாசார நிகழ்வுகளில் பங்குற்றிய சிறார்களுக்கு பயன்தரும் மரங்களையும் பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்து மேலும் உரையாற்றிய பிரதேச சபைத் தலைவர் சர்வானந்தன்;> யுத்தத்திலும் அதன் பின்னரும் நாம் தொடர்ந்து கஸ்டங்களையே அனுபவித்து வருகின்றோம்.

அதேநேரம் இந்த எல்லாக் கால கட்டங்களிலும் சிலர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் வருகின்றார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

எனவேஇந்த நிலைமையில் நாம் பிரிந்து விடாமல் ஒற்றுமையாகச் செயற்பட்டு கிராமத்தைநகரத்தைநாட்டைக் கட்டியெழுப்ப முடியும்பழம்பெரும் ஐயன்கேணிக் கிராமத்தை வளப்படுத்துவதற்கு நாம் பிரிந்து விடாமல் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளர் வடிவேல் பற்குணன் கிறிசலிஸ் தன்னார்வ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் பிமிதுனன் உட்பட கிராம அபிவிருத்திச் சங்கத்தவர்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்மாணவர்கள் பெற்றோர் உட்பட சமூக செயற்பாட்டாளர்களும் பங்குபற்றினர்.











SHARE

Author: verified_user

0 Comments: