சாய்ந்தமருதில் ” நாமும் இலங்கையர் ” என்ற எண்ணக்கருவில் இலங்கையின் பல்லின சமூகங்களின் புத்தாண்டு விழாக்களை பிரயோக ரீதியான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்.இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன நல்லுறவையும் கலாசார பாரம்பரியங்களை கட்டியெழுப்பும் நோக்கில் ” நாமும் இலங்கையர் ” என்ற எண்ணக்கருவில் இலங்கையின் பல்லின சமூகங்களின் புத்தாண்டு விழாக்களை பிரயோக ரீதியான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சாய்ந்தமருத அல் ஜலால் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கையில் காணப்படும் ஒவ்வொரு சமயத்தினரினதும் ஆடை, கலாச்சாரம், புத்தாண்டு நிகழ்வுகள் என்பவற்றை பிரதிபலிக்கும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஷைபூதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு மேற்பார்வை அதிதியாக கல்முனை வலய ஆரம்பப் பிரிவுக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஏ.ஸஹரூன் கலந்து கொண்டிருந்தார்.ஆரம்பப் பிரிவு தரம் 1 மற்றும் தரம் 2 ஆசிரியர்களான ரவீந்திரகுமார் மற்றும் திருமதி அலியார் சக்கீனா ஆகியோரின் நெறிப்படுத்தலில் பிரிவுத்தலைமை ஆசிரியர் மாஹிர் அவர்களின் ஆலோசனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment