மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் 160 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த(உ.தர)ப் பரீட்சை 2021(2022) முடிவுகளின்படி மட்.பட்.களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 209 மாணவர்களில் 160 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் விஞ்ஞானப்பிரிவில் 17 மாணவர்களும், வர்த்தகப்பிரிவில் 19
மாணவர்களும், கலைப்பிரிவில் 62 மாணவர்களும், பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் 30 மாணவர்களும், உயிர்முறைமைகள் தொழிநுட்பப்பிரிவில் 32 மாணவர்களும் அடங்குகின்றன.
இதில் பொறியியல் பீடத்திற்கு தங்கவடிவேல் மிருணா மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 3 ஆம் நிலையினையும், சதீஸ்பிரதாஸ் திகாஜினி உயிர்முறைமைகள் தொழிநுட்பப் பிரிவில் 2ஏ பி யினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் நிலையினையும் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையினைத் சேர்த்துள்ளனர்.
மாணவர்களைப் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர் மற்றும் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், கல்விச் சமூகம் தமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment