27 Aug 2022

பொன். செல்வநாயகம் எழுதிய மட்டக்களப்பு தமிழக பாரம்பரிய மருத்துவம் புத்தக வெளியீடு.

SHARE

பொன். செல்வநாயகம் எழுதிய மட்டக்களப்பு தமிழக பாரம்பரிய மருத்துவம் புத்தக வெளியீடு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைப் பணியகத்தின் தவிசாளராகவும் பணியாற்றிய செட்டிபாளையத்தைச் சேர்ந்த பொன் செல்வநாயகம் எழுதிய மட்டக்களப்பு தமிழக பாரம்பரிய மருத்துவம் புத்தக வெளியீடு எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்  வவுனியா மாவட்ட வைத்தியசாலை வைத்தியநிபுணர் வ.வரணிதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய வெளியீடாக வெளிவரும் இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில், முதன்மை அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தி.சரவணபவான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்..

விசேட அதிதிகளாக, கிழக்குப் பல்கலைக்கழக மேனாள் வேந்தர் வைத்திய நிபுணர் வே.விவேகானந்தராஜா, வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா, மேனாள் நாடாடுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு அதிதிகளாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சி.அமலநாதன், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண முதலமைச்சின் மேனாள் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் மேனாள் செயலாளர் க.சிவநாதன், மீள்குடியேற்ற அமைச்சின் மேனாள் செயலாளர் சி.பாஸ்கரன், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட சிரே~;ட விரிவுரையாளர் வைத்திய நிபுணர் கு.த.சுந்தரேசன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண மேனாள் பணிப்பாளர் எந்திரி திருமதி கலைவாணி வன்னியசிங்கம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தேசிய சம்மேளன மேனாள் உபதலைவர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கௌரவ அதிதிகளாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் கா.சித்திரவேல், பிரதேச செயலாளர்களான வெ.தவராசா, வ.வாசுதேவன், எஸ்.எல்.எம்.ஹனீபா, திருமதி தெட்சணகௌரி தினே~;, சோ.ரங்கநாதன், திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி, கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹிர் ஆகியோரும் கலந்துகொள்வர்.  

முதல் பிரதிகளை மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, வடக்கு கிழக்கு மாகாண ரெலிகொம் பொது முகாமையாளர் எந்திரி மு.பத்மசுதன், கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மேனாள் பீடாதிபதி கலாநிதி சிவக்கொழுந்து பொன்னையா, ஒப்பந்தகாரர் இ.பஞ்சாமிர்தம் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

சிறப்பு அதிதிகள், கௌரவ அதிகளின் பங்கு பற்றலுடன் நடைபெறும் நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி மகிஸா செல்வநாயகம் இசைக்க, புத்தக வெளியீட்டுரையை எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளரும், தேசிய இளைஞர் பாராளுமன்ற மேனாள் உதவிப்பணிப்பாளருமான குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதனும், நூல் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மேனாள் சிரே ஸ்ட விரிவுரையாளர் முனைவர் ஞா.தில்லைநாதன் ஆகியோர் நிகழ்த்துவர். புத்தக எழுத்தாளர் பொன்.செல்வநாயகத்தின் நன்றியுரை மற்றும் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவு பெறும்.

எங்களுடைய பழைய மறைந்து போன கிராமிய பாராம்பரிய வைத்திய முறைகளை இன்றைய இளைஞர் சமூகத்துக்கும், எதிர்கால இளைஞர் சமூதாயத்துக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையத்தைச் சேர்ந்த பொன் செல்வநாயகம் எழுதியுள்ள மட்டக்களப்பு தமிழக பாரம்பரிய மருத்துவம் புத்தகமானது அமைந்துள்ளது.

சித்த, ஆயர்வேதத் துறைகள் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவக் கற்கைகளாக நடைபெற்று வருகின்றன. இத்துறைகளில் கற்கின்ற மாணவர்களுக்கும் இப் புத்தகம் அறிதலின் பொருட்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

மட்டக்களப்பு தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவத்தினை உரைப்பதாக இப்புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் 1961ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாரை மாவட்டம் பிரிக்கப்பட்டதன் பின்னர் உள்ள எல்லையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த பாரம்பரிய வைத்திய முறைகளும் இப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 

SHARE

Author: verified_user

0 Comments: