சட்டவிரோதமாக மண் ஏற்றிய உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது.
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திர நிபந்தனையினை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தார்.அனுமதிப்பத்திர சட்ட விதிமுறைகளை மீறி தாண்டியடி பகுதியில் உழவு இயந்திரப் பெட்டியில் மண் ஏற்றியே போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யபபட்ட நபரையும் உழவு இயந்திரத்தையும் திங்கள்கிழமை (22ம் திகதி) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment