29 Aug 2022

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்.

SHARE

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்.

கிழக்கிழங்கையில் வரலாற்றுச் சிறப்புப் பெற்றதும் சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடைய சித்தாண்டிபதி அருள்மிகு ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் திருகொடியேற்ற உற்சவம் வெள்ளிக்கிழமை(26) நண்பகல் 12.00 மணிக்கு ப்ரமோற்ச பிரதமகுரு சிவஸ்ரீ.கைலாசநாத வாமதேவ குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

கோவிலின் மகோற்வ கொடியேற்றத் திருவிழா ஆரம்ப நிகழ்வில் விநாயகர் பூசை இடம்பெற்றதும், விளக்குமண் எடுத்தல் பூசை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான வயற்காணியில் இருந்து நவதானிங்கள் இடுவதற்கான மண் பூசைகளுடன்  ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

பின்னர் இம்முறை முதன்முதலாக கோவில் கொடியேற்றச் கொடிச்சீலை பாரம்பரியமாக விசேட மேளதாளவாத்தியங்கள் முழங்க ஆலயத்தின் பிரதான வாயில் முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆலயத்தின் எஜமானராகிய வன்னியனார் தலையில் கொடிச்சீலையை வைத்து வண்ணக்குமார் உள்ளிட்ட நிருவாகம் பூடைசூழ அரோகரா கோசத்துடன் ஆலயத்திற்கு கொடிச் சீலை கொண்டுவரப்பட்டு ஆலய உள்வீதி வலம் வந்ததும் கொடியேற்ற பூசைகள் இடம்பெற்றது.

பின்னர்  வசந்த மண்டபத்தில் இருந்து பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய சண்முகப்பெருமான், தேவியுடன் எளுந்தருளிய வீரபத்திரர் கொடித்தம்பம் முன்னதாக எழுந்தருளியதும் கொடியேற்ற பூசை இடம்பெற்றது,  பக்தர்களின் அரோகரா கோசத்துடன் ஸ்ரீ சித்திர வேலாயுத கோவில் கொடியேற்றம் இடம்பெற்றது. தொடர்ந்து உள்வீதி வலம்வந்து கொடியேற்ற உற்சவமூர்த்திகள் வந்த மண்டபத்தில் எழுந்தருளியதுடன் கொடியேற்ற உற்சவத்திருவிழா இடம்பெற்றது.

இக்கொடியேற்ற உற்சவத்துக்கு பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்

குடிப்பரம்பரை முறைத் திருவிழாக்களைக் கொண்ட 16 நாள் திருவிழாவில், 07.09.2022, 08.09.2022, 09.09.2022 ஆகிய திகதிகளில்வரும் மூன்று நாட்களும் அதிவிசேட மயில்கட்டுத் திருவிழாக்களாக இடம்பெறவுள்ளது.

கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகி 16நாட்கள் நடைபெற்று 16வாது நாளாகிய 10.09.2022 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப்பொய்கை பிரணவத் தீர்த்தோற்சவத்துடன் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோயில் வருடந்த மகோற்சவப் பெருவிழா நிறைவயைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















SHARE

Author: verified_user

0 Comments: