15 Jun 2022

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைகள்.

SHARE

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைகள்.

ஒரு இலட்சம் பேரின் கையெழுத்துடன் மக்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோரும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று வருவதாக அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறு கோரும் அந்த கோரிக்கை மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது

இலங்கை மக்களின் சமூக அரசியல் பொருளாதார வாழ்வு முற்றாக செயலிழந்து ஒரு அவல நிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய ஊழல் முற்றிலும் தவறான முகாமைத்துவம் மற்றும் எதேச்சதிகாரமான ஆட்சி முறைமை என்பனவே நாட்டை இந்தளவு வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளியுள்ளன. இது உயிர் உடமை அழிவுகள் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத துன்பத்துக்கு வழிவகுத்துள்ளதோடு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ஷவுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்ஹவும் இணைந்து ஆட்சியை முன்கொண்டு செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஒரு போதும் கோரவில்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் இலங்கை மக்களால் தமது பிரிதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வரும் விடயங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென இதன் கீழ்க் கையொப்பமிடும் இலங்கை மக்களாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதன் மூலமே அரச முறைமையில் முறைசார் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஜனாதிபதி கோட்டபாய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஆகியோர் தலைமை வகிக்கும் தற்போதைய அரசாங்கம் நாடு தற்போது அனுபவிக்கும் வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ஒரு தோல்வியடைந்த அரசாங்கம் என ஏற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த அரசாங்கத்தைப் பதவியில் நீடிக்கும் எந்தவித ஆதரைவயும் வழங்கக் கூடாது.

இந்தக் கோரிக்கையை முன்னொண்டு செல்லும் வகையில் முன்னெடுத்துள்ள மக்கள் தலைமையிலான எந்தவொரு போராட்டத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரபுபடுத்த முயற்சி மேற்கொள்ளக் கூடாது

தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துக்கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அத்தோடு அடுத்த தேர்தலுக்கான காலவரையறையை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் வகையில் காணப்படும் பிரதம மந்திரியின் தலைமையில் அமைச்சரவைக்கு ஆட்சி அதிகாரம் வழங்கும்  21வது சீர் திருத்தச் சட்டம் தேவையான எந்தவொரு திருத்தத்துடனும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்பொழுது அத்திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு பாராளுமன்ற அனைத்து ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும்.






SHARE

Author: verified_user

0 Comments: