3 Jun 2022

நாட்டைக் குட்டிச் சுவராக்கிய கோட்டா அரசும் வேண்டாம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலின் நிருவாகமும் வேண்டாம் மட்டக்களப்பில் ஜேவிபி யினர் தெருத்தெருவாகப் பிரச்சாரம்.

SHARE

நாட்டைக் குட்டிச் சுவராக்கிய கோட்டா அரசும் வேண்டாம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணிலின் நிருவாகமும் வேண்டாம் மட்டக்களப்பில் ஜேவிபி யினர் தெருத்தெருவாகப் பிரச்சாரம்.

நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான  அரசும் வேண்டாம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்ஹவின் பிரதமர் நிருவாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக தாங்கள் கோரிக்கை விடுப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியினர் மட்டக்களப்பில் தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜே.வி.பி. யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஜே.வி.பியின் பிரச்சாரகர்களும் அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையிலான அணியினர்  புதன்கிழமை மாலை 01.06.2022 ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தெருக்களில் கால்நடையாகச் சென்ற இக்குழுவினர்வனப்புமிக்க தேசம் அழகான வாழ்க்கை மற்றும் அன்பு மிக்க மக்களேஎன விளிக்கும் இரு கையேடுகளை மக்களுக்கு விநியோகித்தனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கோட்டா மற்றும் ரணில் தலைமையிலான நிருவாகத்தினால் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை ஒரு போதும் தீர்த்துவிட முடியாது. அதனால் இவர்கள் ஒதுங்கிக் கொண்டு மக்களாட்சியை நிறுவவதற்கு இடம்கொடுக்க வேண்டும். மக்களால் விரும்பப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மக்கள் சார்பாக எமது கோரிக்கையாகும்.

இவர்கள் நிருவாகப் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு விமோசனம் இருக்காது. கொள்ளையடிக்கின்ற அரசாங்கத்துக்கு உதவி அளிக்க சர்வதேச நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்வர வாய்ப்பில்லை. இவர்கள் மக்களால் வெறுக்கப்பட்ட மக்கள் நிராகரித்த தலைவர்கள்.

இவர்களால் மக்கள் தொடர்ந்தும் வதைப்பட முடியாது. கோட்டா ஆட்சிக்கு வரும்போது பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய். இப்பொழுது 535 ரூபாய், தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 160 ரூபாய் இப்பொழுது 800 ரூபாய் அன்று சீமெந்து ஒரு பக்கெற் 850 ரூபாய் இப்பொழுது 3200 ரூபாய்  சமையல் எரிவாயு அன்று 1400 ரூபாய் இப்பொழுது 5200 ரூபாய் பாண் ஒரு இறாத்தல் 50 ரூபாய். இப்பொழுது 160 ரூபாய். விலைகளே அதிகரித்திருக்கின்றன. ஆனால் சம்பளம் அன்று கோட்டா இருக்கும்போது கிடைத்த அதே சம்பளமும் அதை விடக் குறைந்த வருமானமுமே மக்களுக்கு கிடைக்கின்றது. எனவே இந்த நிலைமையை மாற்ற வேண்டும். அணி திரளுங்கள்.” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: