வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான மதுபான போத்தல்கள் களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை(14) இரவு பெரியகல்லாறு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெருந்தொகையான சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மதுபான போத்தல்கள் களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, மற்றும் திங்கட்கிழமை விடுமுறை தினங்களாக உள்ளதனால் இதனை முன்னிட்டு அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கே இவ்வாறு பெருந்தொகையான மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க அவர்களின் பணிப்பின் பேரில் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயரத்னவின் கண்காணிப்பில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரமவின் தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் ஜே.பி.ஜோய், பொலிஸ் சார்ஜன் பண்டார(63435), பொலிஸ் கொஸ்தாம்பிள் பிரதீபன்(8209), பொலிஸ் கொஸ்தாம்பிள் ரமணன்(33818), பொலிஸ் கொஸ்தாம்பிள் சம்பத்(38774), பொலிஸ் கொஸ்தாம்பிள் விதுசன்(99077), பொலிஸ் கொஸ்தாம்பிள் ஹேரத்(732577, பொலிஸ் கொஸ்தாம்பிள் சனுஜன்(90091), பொலிஸ் கொஸ்தாம்பிள் விஜிதான்(3886), உள்ளிட்ட குழுவினரே இதனைக் கைது செய்துள்ளனர்.
ஆறு இலட்சம் பெறுமதி மதிக்கத்தக்க மதுசாரம் மற்றும் பியர் போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வீட்டில் மதுபான போத்தல்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் சந்தேகநபர்களை பொலிசாரால் கைதுசெய்து செய்துள்ளதாக தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment