16 May 2022

13 வருடகாலமாக இரத்த ஆறு ஓடிய இடம்தான் அந்த முள்ளிவாய்க்கால்.

SHARE

13 வருடகாலமாக இரத்த ஆறு ஓடிய இடம்தான் அந்த முள்ளிவாய்க்கால்.

தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் 13 வருடங்களை எட்டி நிற்கின்றது. இக்காலத்தை நாம் முள்ளிவாய்க்கால் படுகொலை நட்களாக நாம் இதனை அனுஸ்ட்டித்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது அனுஸ்ட்டிப்பபனது எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முன்றலில் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி இந்நிகழ்வை முடித்துக் கொள்ளவுள்ளோம். 13 வருடகாலமாக இரத்த ஆறு ஓடிய இடம்தான அந்த முள்ளிவாய்க்கால். அந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் உப்பில்லாத கஞ்சிக் கோப்பையுடன் உயிர்வாழ வேண்டும் என இருந்த ஒரு லெட்சத்தி அறுபத்தி ஏழாயிரத்துக்கு மேற்பட்ட எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

என வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத்தின் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார். “பொத்துவில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான பயணத்தின் மே18 இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்  ஞாயிற்றுக்கிழமை(15) மாலை களுவாஞ்சிகுடியை வந்தடைந்தது. இதன்போது அவர்களால் வீதியில் சென்ற மக்களுக்கு கஞ்சி வழங்கி, இன விடுதலையாளர்களைக் கைது செய், மகிந்த ராஜபக்சவை கைது செய், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை கைது செய், சர்வதேசமே எமக்கு நீதியைப் பெற்றுத்தா, என கோசமிட்டனர். இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..

முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்னும் இரத்த வாடை வீசிக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த மண்ணில் கால் வைத்துப்பாருங்கள் உங்களுக்குத் தாமாகவே ஓர் உணர்வு வரும், நன்றாக காது கொடுத்து கேட்டால் மக்களின் அவலக்குரல்கள் கேட்கும். அந்த மண்ணில் மடிந்த ஒவ்வொரு உயிரின் ஒலியும் அங்பே கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனை மேற்கொண்டது அன்று பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சதான். இதனை உண்மையில் உலக நாடுகள் பார்க்கவில்லையே, அங்கிருந்த மனித உரிமைகள் எங்களை விட்டு ஓடிச் சென்றது, எங்களை விட்டுப்போக வேண்டாம் என நாம் அவர்களின் வாகனத்தின் முன்நின்றோம். அன்றிலிருந்து பூ உதிர, பிஞ்சு உதிர, காய் உதிர, கனி உதிர என சகல தரப்பினரையும், கொத்துக் குண்டுகளால் அழித்தார்கள்.

இது மாத்திரமின்றி 13 வருடகாலமாக சரணடைந்த எமது உறவுகள் எங்கே, எனது கணவரை 2009.05.17 அன்று வட்டு வாகல் முன்றலில் வைத்து சரணடைந்தார். அன்று சரணடைந்த ஆயிரக்கணக்கானோரை போரூந்துகளில் ஏற்றிச் சென்றார்கள் அவர்கள் எங்கே. இதனைக் கேட்டும்போது தற்போது கூறுகின்றார்கள் அவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் இலக்கத்தை கூறுங்கள் எனத் தெரிவிக்கின்றார்கள். நங்கள் அப்போது இருந்த நிலமையில் எமது உயிர் மரண ஓலத்தில் ஆடிக்கொண்ட நேரம் அது அப்போது அந்த வாகனத்தின் இலக்கங்களையா நாம் கவனித்தோம். தற்போது இந்த நடை பயணத்தில் கலந்து கொண்டிருக்கும் நபர்களுடன் ஏனைய பொதுமக்கள், பொது அமைப்புக்ளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், என அனைவரும் ஒன்றிணைந்து எமது நீதி வேண்டிய கண்ணீர் பயணத்தில்  பல்லாயிலக் கணக்கானவர்கள் ஒறிணைய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: