13 Dec 2021

கரடியனாறு சிவத்த போக்கடி - அன்னை வேளாங்கன்னி ஆலயம் திறந்து வைப்பு.

SHARE

கரடியனாறு சிவத்த போக்கடி -  அன்னை வேளாங்கன்னி ஆலயம் மட்டக்களப்பு மறைமாநில ஆயர்  ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு - கரடியனாறு  சிவத்த போக்கடி - கிராமத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட அன்னை வேளாங்கன்னி ஆலயம் ஞாயிற்றுக் கிழமை (12)

மட்டக்களப்பு மறைமாநில ஆயர்  வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் ஓர் சிறிய ஆலயத்தில் அமர்ந்திருந்து அருள் வளங்கிய வேளாங்கன்னி மாதவுக்கு ஆலய ப






ங்கு தந்தை ஜெமில்டன் முயற்சியால் இறைமக்களின் ஆதரவுடன் புதிய ஆயயம் அமைக்கப்பட்டு அவ் ஆலயம் இத்தினத்தில் திறந்து வைக்கப்பட்டதுடன் மறைமாநில ஆயர்  வணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் பங்குத்தந்தை ஜெமில்டன் மற்றும் அருட்தந்தை மகிமைதாஸ் போன்றோரால் விஷேட பூசை நடாத்தப்பட்டு கூட்டுத்திருப்பலி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற இந் நிகழ்வில் கரடியனாறு, சிவத்த வோக்கடி, ஆயித்தியமலை போன்ற கிராமங்களிலிருந்து இறைமக்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த இறை மக்களுக்கு ஆயரினால் ஆசீர்வாதம் வழங்கியதுடன் நல்வழிப்படுத்தும் சமயக் கருத்துக்களும் வழங்கப்பட்டது.


           

SHARE

Author: verified_user

0 Comments: