28 Nov 2021

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு.

SHARE

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு.

இப்பூவுலகில் சைவத்தையும் தமிழையும்  வளர்த்தெடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மகான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தெய்வநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய சிதானந்த தபோவனத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்களின் தலைமையில்  27.11.2021 ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு உணர்வுபூர்வமாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கிழக்கிலங்கை இந்துமத மேம்பாட்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளரும் சைவப்புலவருமான சிவஸ்ரீ. சி.சிவராஜா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  மேலும் இந்நிகழ்வில் நந்திக்கொடியேற்றல், கொடிக்கவி இசைத்தல், மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், அறநெறி கீதம் இசைத்தல், தமிழ்மொழி வாழ்த்து என்பன இடம் பெற்றது. இவற்றை தொடர்ந்து ஆசியுரையிரன ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதமகுரு பிரம்மச்சாரி. சபரீஷ சைதன்யர் அவர்கள் நிகழ்த்தினார். ஆறுமுகநாவலர் பெருமானின் வாழ்க்கை வரலாறு, தமிழுக்கும், சைவத்திற்கும் ஆற்றிய பணிகள் மற்றும் அவரது சிறப்புக்கள் பற்றி அறநெறிப்பாடசாலை மாவண மாணவிகளால்  உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன. மேலும் ஆன்மீக அதிதியால் சிறப்பு சொற்பொழிவும், மட்டக்களப்பு தெய்வநெறிக்கழகத்தின் தலைவரும், முனனாள் ஓய்வுநிலை கணக்காளரும் முன்னாள் கிழக்குமாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளருமான திரு.அ.ரவீந்திரன் அவர்களால் சிறப்புரையும் ஆற்றப்பட்டது. இறுதியாக நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டு விசேடபூசை வழிபாடுகளும் அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலும் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நே.பிருந்





















தாபன், மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சர்மிலா துஸ்யந்தன் மற்றும் தெய்வநெறிக்கழக உபதலைவர்  சி.வரதநிரோசன், செயலாளர்  கு.சிந்துஜன் மற்றும் இதன் உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: