26 Sept 2021

மக்களின் வாழ்வாதாரத்தை வலுவாக்க தலைவர்களுக்கும் ரி.எம்.வி கட்சி அழைப்பு.

SHARE

மக்களின் வாழ்வாதாரத்தை வலுவாக்க  தலைவர்களுக்கும் ரி.எம்.வி கட்சி அழைப்பு.

மக்களின் வாழ்வாதாரத்தை வலுவாக்குவதற்காகவும், தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காகவும், அல்லும் பகலும் பாடுபடுகின்ற எல்லா தலைவர்களையும், வரவேற்கின்றோம், ஒன்றாகப் பயணிப்போம்எமது மக்களின் எதிர்காலத்தை மாற்றுவோம், மாவட்டத்தின் வறுமையைப்போக்கி, கல்வியை உயர்துவதற்கு கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினூக எமது தலைவர் மிகவும் தெழிவாகத் தெரிவித்திருந்தார்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் சுபிட்சத்தின் நோக்கு செயற்றிட்டத்தின் கீழ் நாடு முழுவதுவும் 40 லெட்சம் தென்னம் கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குரிய தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 200 தென்னங் கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழi(25) மாலை நெல்லிக்காடு கிராமத்தில் அக்கட்சியின் முக்கியஸ்த்தர் .தயாபரன் தலை மையில் நடைபெற்றது.

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கல்விக்காகவும், மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் அதிக நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் தென்னை அபிவிருத்தியில் தேசிய உற்பத்திற்கு மட்டக்களப்பு மாவட்டம் பாரிய பங்களிப்பைச் செய்து வந்தது ஆனால் யுத்தத்தின் காரணத்தினால், தென்னை மரங்கள் மாத்திரமல்லமல் பொருளாதாரங்களும் தடைப்பட்பட்டிருந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம் வலுப்பெற வேண்டுமாக இருந்தால் மிகவும் சிரத்தையுடன் செயற்பட வேண்டும்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

 

ஓவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 தொடக்கம் 50 ஆயிரம் தென்னம் கன்றுகள் வழங்கப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒவ்வொரு நாழும் 2 இலெட்சம் தேங்காய்கள் தேவைப்படுகின்றன. எனவே எமது மாவட்டத்திற்கு வரும் இறக்குமதிகளை நிறுத்தி இங்குள்ள வளங்களைப் பயன்படுத்த வேண்டும். வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பு நகர், ஆரையம்பதி உள்ளிட்ட பகுதிகளில் தென்னைச் செய்கைக்கு ஏற்ற பகுதிகள் உள்ளன. போரதீவுப்பற்று உள்ளிட்ட பட்டிருப்பு பிரதேசம் தென்னைச் செய்கைக்கு அப்பால் விவசாயத்திற்கு அதிகமான நிலங்கள் பயன்படுத்தப்படுகின்ற. எனவே தேங்களை உற்பத்தியில்  அனைவரும் செயற்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள ஒரு தனி மனிதன் ஒரு மாத்திற்கு 5180 ரூபாவை செலவு செய்கின்றோம். தேசிய ரீதியில் ஒரு தனி மனிதன் ஒரு மாதத்திற்கு 4996 ரூபாவை செலவு செய்கின்றார், எனவே தேசியரீதியில் ஒருமனிதன் செலவு செய்வதிலும் பார்க்க 180 ரூபாவை மட்டக்களப்பிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் மேலதிகமாக செலவு செய்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 6 இலெட்சம் பேர் இருக்கின்றோம். எனவே மிகவும் அதிகமான நிதியை நாம் வீணாக செலவு செய்கின்றோம். எனவே நாம் செலவுகளைச் சுருக்குவதற்காக உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். 

எமது மாவட்டத்திற்கு கோழிமுட்டை, அரிசி, தேங்காய், உள்ளிட்ட அனைத்தும் வெளிமாவட்டத்திலிருந்துதான் கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பில் அதிகமான வளங்ககள் உள்ளன. கிழக்கிலுள்ள வளங்களை கிழக்கிலுள்ள மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எனவே எமது மாவட்டத்தின் வளங்களைப் பயன்படுத்துவதற்று முன்வருமாறு எமது இளைஞர் யுவதிகளுக்கு நாங்கள் பகிரங்கமாக அழைப்பு விடுகின்றோம். அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க எமது தலைவர் தயாராக இருக்கின்றோம்.

நாளாந்தமம் எல்லைககளையும், காணிகளையும் பிடிக்கின்றார்கள் என ஆர்ப்பாட்டங்கள் செய்வதுவும். வீர வசனங்கள் பேசுவதும் அரசியல் அல்ல. அங்கிருக்கின்ற வளங்களப் பயன்படுத்துகின்றபோது  அதிலிருந்து பொருளாதாரத்தைப் பெறுவதோடு, நிலங்களையும் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.  இதனைவிடுத்து எதனைச் செய்தாலும் பிழை என விமர்சனம் செய்வதாகத்தான் சிலர் இருக்கின்றார்கள். இவ்வாறு அனைத்திலும் பிழை பிடிக்கும் சில தமிழ் தேசியத்தின் கடந்தகாலப் போக்குத்தான் தற்போது தமிழ் மக்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கின்றது. இதன் காரணமாகத்தான், அரசியல் அதிகாரத்திற்காக மாற்று சமூகத்திடம், கையேந்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. எமது மக்கள் எல்லோருக்கும் வாக்களிக்கின்றபோது ஏதாவது நல்லது நடக்குமா என எதிர்பார்த்து வாக்களித்தார்கள். அவ்வாறு வாக்குப்பபெற்ற எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மக்களுக்கு தன்னாலான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தை வலுவாக்குவதற்காகவும், தமிழர்கள் தலைநிதிர்ந்த வாழ்வதற்காகவும், அல்லும் பகலும் பாடுபடுகின்ற எல்லா தலைவர்களையும், வரவேற்கின்றோம், ஒன்றாகப் பயணிப்போம்,  எமது மக்களின் எதிர்காலத்தை மாற்றுவோம், மாவட்டத்தின் வறுமையைப்போக்கி, கல்வியை உயர்துவதற்கு கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தினூக எமது தலைவர் மிகவும் தெழிவாகத் தெரிவித்திருந்தார். என அவர் தெரிவித்தார்.

இதன்போது சட்டத்தரணி திருமதி.மங்களேஸ்வரி சங்கர், போரதீவுப்பற்று பிரதேச தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சாமிக்க ராஜபக்ஸ, மற்றும் பனாளிகள் உள்ளிட்டபலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.SHARE

Author: verified_user

0 Comments: