கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய கலைஞர்களுக்கான வண்மை விருத்தி செயலமர்வு.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான வண்மை விருத்தி செயலமர்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்றது.
மண்முனை மேற்கு காலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜாவின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.நவநீதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற கலாசார வண்மை விருத்தி செயலமர்வில் கலாபூசனம் எம்.அருளம்பலம் கலந்துகொண்டு கலைஞர்களுடனான கலைப் பகிர்வினை மேற்கொண்டதுடன் கலை தொடர்பான ஆற்றுகைகளும் இடம்பெற்றது.
மேலும் இதன்போது> பிரதேச மக்களின் பாரம்பரிய கலைகளை மீளக் கட்டியெழும்பும் செயற்திட்டமாக கலந்
து.ரையாடல்களும் இங்கு இடம்பெற்றது.
பாரம்பரிய கலைதொடர்பாகவும் இக்கலைகள் ஒவ்வெரு சமூகத்திலும் கட்டிக் காக்கப்பட
வேண்டும் என்பது தொடர்பில் இதன்போது
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.நவநீதன் கருத்துரை வழங்கினார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கலாசார பிரிவின் உத்தியோகத்தர்கள்> பிரதேசத்தின் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
0 Comments:
Post a Comment