உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களில் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு முன்னின்று உழைப்பதன் மூலமேசுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை வெற்றி கொள்ள முடியும் – சுபையிர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய பிரதேச சபை உறுப்பினரின் சத்தியப்பிரமாண நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இடம் பெற்றது.
அங்கு உரையாற்றும் போதே இக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த ஒரு ஆசன அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் அப்பதவியை தாமாகவே முன்வந்து இராஜினாமா செய்தமையினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேக்கர குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு அப்பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட பட்டியல் வேட்பாளர் எம்.ரீ.எம்.பைறூஸ் என்பவரை நியமித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி கடந்த ஜூலை மாதம் 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினரின் சத்தியப்பிரமாண நிகழ்வு புதன்கிழமை (05) மாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர், பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment