மட்டக்களப்பு-காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள 8 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள
8 கிராம சேவகர் பிரிவுகளை இன்று காலை முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்
பொருட்டு 8 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார
அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்படவுள்ள 8 கிராம சேவகர் பிரிவு எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை
செவ்வாய்க்கிழமை (22.06.2021) மாலை இடம் பெற்றது.
இதன் போது குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு சென்ற காத்தான்குடி சுகாதார வைத்திய
அதிகாரி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர், நகர சபை ஊழியர்கள், காத்தான்குடி பொலிசார்
மற்றும் இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்படவுள்ள எல்லைகளை அடையாளப்படுத்தினர்.
0 Comments:
Post a Comment