8 Apr 2021

பண்டிகை காலத்தையொட்டி மட்டு.மாவட்டத்தில் உணவகங்கள் பலசரக்கு விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு.

SHARE

பண்டிகை காலத்தையொட்டி மட்டு.மாவட்டத்தில்  உணவகங்கள் பலசரக்கு விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு.

பண்டிகை காலத்தையொட்டி  உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார அலுவலக பிரிவில்  உணவகங்கள் பலசரக்கு விற்பனை நிலையங்கள் என்பவற்றை சோதனை செய்யும் நடவடிக்கை காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக காத்தான்குடி பொதுச் சந்தை மற்றும் பொதுச் சந்தையில் உள்ள பலசரக்கு விற்பனை நிலையங்கள் உணவகங்கள் என்பன  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகளினால் பரிசோதனை செய்யப்பட்டன. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம் நபீல் தலைமையில் மேற்பார்வை சுகாதார பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்எம் பஷீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்
இதன் போது சுகாதார அதிகாரிகள் பல சரக்கு விற்பனை நிலையங்கள் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் நிலையங்கள் என்பவற்றில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களில் தரம் மற்றும் அதனுடைய காலாவதியாகும் திகதி உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இந்த வாரத்தில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள அனைத்து உணவு விற்பனை நிலையங்கள் பல சரக்கு விற்பனை நிலையங்கள் ஹோட்டல்கள் சிற்றுண்டிச் சாலைகள் என்பவற்றை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: