2 Apr 2021

மட்டு - வின்சன்ட் தேசிய பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தின் புனருத்தாரணத்திற்கு கல்வி இராஜங்க அமைச்சர் நிமால் நிஸாந்த டீ சில்வா 3.2 மில் ஒதுக்கீடு.

SHARE

மட்டு - வின்சன்ட் தேசிய பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தின் புனருத்தாரணத்திற்கு  கல்வி இராஜங்க அமைச்சர் நிமால் நிஸாந்த டீ சில்வா 3.2 மில் ஒதுக்கீடு.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முன்பள்ளி மற்றும் இராஜாங்க அமைச்சர் நிஸாந்த டீ சில்வா அமைச்சின் செயலாளர் திருமதி.குமாரி ஜயசேகர சகிதம் மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் உயர்தர தேசியப்பாடசாலைக்கு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வேண்டுகோளையேற்று திடீர் விஜயத்தை வியாழக்கிழமை  (01)  மேற்கொண்டிருந்தார்.

அப்போது பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்தை பார்வையிட்டு அதன் குறைபாடுகளை கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அதன் அபிவிருத்திக்காக 3.2 மில் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் ஆசிரியர்கள், ஆளணியினர் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரன், பாடசாலை அதிபர், அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோரும் அதில் கலந்து கொண்டனர்.

இங்கு தலைமை உரை நிகழ்த்திய பாடசாலை அதிபர்  திருமதி.தவத்திருமகள் உதயகுமார்…..  பாடசாலையின் தேவைகளை பட்டியலிட்டு சம்ர்ப்பித்ததோடு பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் முயற்சி குறித்து அவரைப் பாராட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது உரையில்….. இப்பாடசாலை இரு நூற்றாண்டுகள் தொன்மை வாயந்ததென்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரணதர, உயர்தர  பரீட்சைப்பெறுபேறுகளில் இவ் மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்கிறதென்றும் சுட்டிக்காட்டினார். இருந்தும் பாடசாலையின் பௌதீகத் தேவைகள் பூரணமாக நிறைவேறவில்லை. இதனை எனது சக நண்பன் என்ற வகையிலும் ஒரு நல்ல திறமை மிகுந்த முன்னாள் ஆசிரியன் என்ற வகையிலும் கவனத்தில் எடுத்து நிறைவேற்றித்தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க, பாடசாலை சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் நிமல் நிஸாந்த டீ சில்வா உரையாற்றுகையில்,….. தேசிய பாடசாலைகள் வெறுமனே தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மாத்திரம் இயங்குவதை பார்க்கிறேன் அப்படி பாடசாலைகள் இருக்கக் கூடாது. கல்விக்கு மட்டுப்படுத்தப்பட்ட விசாலம் இல்லை அதுகடல் போன்றது.  ஒரு பாடசாலையின் கல்வி அபிவருத்திக்கு அங்குள்ள பௌதீக வளங்கள் பிரதான வகிபாகம் வகிக்கின்றன. விஞ்ஞான ஆய்வு கூடம் இன்றி விஞ்ஞானம் போதிப்பதிலுள்ள சிரமங்களை ஒரு ஆசிரியராக இருந்த அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன். அதற்காகவே அதன் புனரத்தாரணத்திற்காக இப்போது 3.2 மில் ரூபாவை ஒதுக்கியுள்ளேன்.

ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எனது இதமான நண்பர் அவரது நியாயமான வேண்டுகோளை நான் தட்டிக்கழிக்க முடியாது. எமது ஜனாதிபதியின் சுபீட்ச நோக்கமும் இதுதான் யாவரும் குறைகளின்றி சந்தோசமாக அபிவிருத்தி காண வேண்டும். ஆதலால் இப் பாடசாலை நல்லதொரு பாடசாலையாக மென்மேலும் வளர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.SHARE

Author: verified_user

0 Comments: