17 Mar 2021

2025 ஆம் ஆண்டில் இந்த மண்ணிலே பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்போம். – பிள்ளையான் எம்.பி. நம்பிக்கை.

SHARE

2025 ஆம் ஆண்டில் இந்த மண்ணிலே பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.  – பிள்ளையான் எம்.பி. நம்பிக்கை.

எனக்கு வயல்வெளிகளிலும், குளக்கரைகளிலும் நடக்கக்கூடிய சூழலை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். அத்தோடு மக்கள் இட்ட வாக்கினால் ஒரு அரசியல் பிரமுகராகவும் மக்கள் முன்னிலையில் திகழ்வதற்கு எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த வகையில் எமது மண்ணைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை என்னுடைய தலையிலும் சுமக்கின்றேன். எம்முடைன ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள்ளே நூறு வீதம் இல்லாவிட்டாலும் 70 வீதமாவது நிறைவேற்ற வேண்டும் என்றுதான நான் தினமும் சிந்தித்து வருகின்றேன்.

என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு உப்பு வெட்டிக்குளம் புனரமைப்பு செவ்வாய்கிழமை(16) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு அபிவிருத்தித்திட்டத்தை ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில்;…

ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பஸில் ராஜபக்ஸ ஆகியோரின் எமது மாட்டத்திற்கு ஏற்றாற்போல் சிறந்த திட்டமிடலினூடாக பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்துள்ளார்கள். எனவே எதிர்வருகின்ற 2025 ஆம் ஆண்டில் இந்த மண்ணிலே பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.

அதபோல் விவசாயத்திலே விவசாயிகள் இன்னும் கூர்மையடைய வேண்டும். எம்மிடம் இருக்கின்ற வளங்களை எவ்வாறு பெருக்குவது என அதிகளம் சிந்திக்க வேண்டும். விவசாயிகள் மண் பரிசோதனைகளிலும் ஈடுபட வேண்டும். நவீனத்துவமான செயற்பாடுகளையும் கைக்கொள்ள வேண்டும். இதற்குரிய தொழில்நுட்ப விடையங்களையும், அறிந்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கரில் குறைந்தது 30 தொடக்கம் 40 நெல் மூடைகளை விளைவிக்கக் கூடிய செயற்பாடுகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் அதிகளவு விளைச்சலை அதிகரிப்பதற்குத் தேவையானை அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தேவையான நெல்லை நமது மாட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அற்காக புதிய புதிய நெல்லினங்களையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். தற்போதைக்கும் வெளி மாவட்டத்திலிருந்துதான் மட்டக்களப்புக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. நாட்டுக்கோழிகளை விற்றுவிட்டு ஊசி ஏற்றிய கோழிகளை நாம் வாங்குகின்றோம். இதுதான் தற்போதைய நிலமையாகவுள்ளது.

கடந்த யுத்தகாலத்தில் எதையும் பற்றி சிந்திக்க முடியாமலிருந்தது, நாணல் புல் இருந்தால்தான் ஒழிந்திருக்கக்கூடிய நிலமை இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலமை இல்லை. எமது வளங்களை நாம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தாமல் பல நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள். இங்குள்ள விவசாயக் குடும்பங்களிலிருந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாக வேண்டும். ஆனாலும் நமது மக்கள் வீதிகளிலும், பேரூந்து தரிப்பிடங்களிரும் அலைந்து திரிகின்றதைப் பார்த்து வேதனையாகவுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைச்சர் வந்த மண்டூர் பாலம் நிருமானிப்பதற்கு அடிக்கல் நடப்பட்டதுஆனால் இதுவரையில் பாலத்தைக் காணவில்லை. அதபோல் எனது ஊரிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தார் அவரது ஊரிலே உள்ள பாடசாலை மூடப்பட்டுள்ளது. இதுதான் எமது ஊரிலிருந்த யோகேஸ்வரன் அவர்கள் 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செய்த சாதனைஅவ்வாறு நாங்கள் செய்யப்போவதில்லை.

எதற்கு மக்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பவது. பிள்ளையான் வெற்றிபெற்றால் மகிந்த பக்கம்தான் செல்வார் என்பதை மக்கள் நன்கு அறிந்துதான் எனக்கு வாக்களித்தார்கள். என மக்கள் மத்தியில் நாங்கள் தொடர்ந்து சேவைசெய்வோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: