17 Mar 2021

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தீர்க்கவேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன – பிரதேச செயலாளர் சிவப்பிரியா.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தீர்க்கவேண்டிய பல பிரச்சனைகள் உள்ளனபிரதேச செயலாளர் சிவப்பிரியா.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதியும், அபிவிருத்திகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளன. அதுபோல் 2021 ஆம் ஆண்டில் இவ்வாறு அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்ல அனைத்து திணைக்களங்களும் ஒத்துழைப்பு வழங்குவர்கள் என எதிர்பார்கிறேன். என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம். செவ்வாய்கிழமை(16) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் பரமசிவம் சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருனாகரம்(ஜனா), இரா.சாணக்கியன், திணைக்களத் தலைவர்கள், துறைசார்ந்த அரச உயர் அதிகாரிகள், கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொலிசார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தீர்க்கப்படாமலிருந்து வருகின்ற பிரச்சனைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே பிரதேச செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தி தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இப்பிரதேத்தின் வடக்கே குருக்கள்மடம், மற்றும் தெற்கே பெரியகல்லாறு ஆகிய பகுதிகளில் எல்லைப் பிரச்சனைகள் இருந்து வருகின்றன. களுதாவளைக் கிராமத்தில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் இதுவரையில் திறக்கப்படாமலுள்ளது.

குருக்கள்மடம்வடக்கு பிரிவில் தேசி வீடமமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி வீடமைப்புத்திட்டம் இதுவரையில பூரணப்படுத்தப்படவில்லை. இப்பிரதேசத்தில் அரச காணிகள் இன்லை, அவ்வாறு மிகக் குறைந்த அளவு அரச காணி காணப்படினும் அதில் பொதுமக்களின் அத்துமீறல்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் காணப்படும், குளங்கள், மற்றும் நீரேந்து பகுதிகளையும் பொதுமக்கள் அத்து மீறிபிடித்துள்ளனர்.  என அவர் இதன்போது தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: