கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்ச்சியால் கட்டிட நிர்மாணத்தொழிநுட்ப கற்கைநெறி மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரி பழைய மாணவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து குறித்த கற்கைநெறி சம்பந்தமாக மாணவர்கள் எடுத்துக்கூறியபோதே மீண்டும் மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியில் ஆரம்பிப்பிதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் ஊடாக குறித்த கற்கைநெறி நடவடிக்கைகளுக்குரிய அமைச்சர் சீதா அரம்பேபொல அவர்கள் மூலமாக இக் கற்கைநெறி மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கற்கைநெறியினைக் கற்க இம்மாதம் 29ம் திகதியிற்கு முன் இணையத்தளம் மூலமும்,மட்டக்களப்பு தொழிநுட்பக்கல்லூரிக்கு நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம்.
இக்கற்கைநெறிக்கான கல்வித் தகமைகள் க.பொ.உயர்தரத்தில்(A/L)மூன்று பாடங்கள் சித்தி மற்றும் NVQ-04 சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment