24 Jan 2021

27 நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு.

SHARE

27 நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 30ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த காத்தான்குடி நகரின் ஒரு பகுதி வர்த்தக நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (24) காலை முதல் திறக்கப்பட்டிருந்தன.

கடந்த 31 ஆம் திகதி முதல் கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது..

தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின் 8 கிராம சேவையளர் பிரிவுகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.

தனிமைப்பத்தல விலக்கப்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கெர்ளப்பட்டு ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று முதல் வர்த்தக நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்தியகாரி டாக்டர் .எல்.நபீல் தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட 8 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை (24) முதல் வழமையான அலுவல்கள் இடம்பெற்று வருகின்றன.

பிரதேசத்தின்ஏனைய 10 கிராம சேவகர்பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: