(ராஜ்)
திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனமும் திருகோணமலை மாவட்ட செயலக ஊடகப் பிரிவும் இணைந்து மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மூவின ஊடகவியலாளர்களுக்குமான கொவிட்19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.குறித்த நிகழ்வானது இன்று (01) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றதுடன் இதில் பால் நிலை மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான செயலமர்வும் இடம் பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் பல வகையான செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளதுடன் கொவிட்19 காலத்திலும் பணியாற்றி பல சவால்களுக்கு முகங்கொடுத்து ஊடக சேவைகளை தொடர்கின்றனர்.
சுமார் 30 பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கொவிட்19 பாதுகாப்பு உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராளா ,உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், அகம் மனிதாபிமான. நிறுவனத்தின் க. லவகுராஜா, வளவாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயக் குமார்,பிரதேச ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment