தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் தற்போது விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக அக்கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அவருக்கு பதிலாக இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெகநாதன் ஜெயராஜ் அவர்கள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக (acting secretary) தலைமை பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெகநாதன் ஜெயராஜ் அவர்கள் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் என்பதோடு, அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் தன்னாலியன்ற சமூக சேவைகளையும் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment