கடந்த காலங்களில் மட்டக்களப்பிலிருந்த அரசியலவாதிகள் மக்களினால் கோரிக்கைகள் துன்பங்களைக் கருத்திற் கொண்டு செயற்படவில்லை – கோபிநாத்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுக்கான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மக்களும் வேறு மாற்றுத் தலைமையை எதிர்வருகின்ற தேர்தல் மூலம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஏமாந்து, ஏமாந்து, தற்போது வாக்களிக்கப் போவதற்கே தயங்குகின்றார்கள். வாக்குக் கேட்டு மக்களிடத்தில் செல்லும் அனைவரும் பல உறுதி மொழிகளை வழங்குகின்றார்கள். அவ்வாறு வழங்கும்போது அதனை எதிர்காலத்தில் நிறைவேற்றலாமா என்பது பற்றிச் சிந்திக்கின்றார்கள் இல்லை. இவ்வாறு பலரும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். இந்த Nர்தலில் மக்களை எமாற்ற முடியாது. இவ்வளவு காலமும் நடைபெற்றது கட்சிகளின் வெற்றியாகும். இம்முறை தேர்தல் அது மக்களின் வெற்றியாக இடம்பெறப்போகின்றது.
அனைவரும் சொல்கின்றார்கள், தமிழர்களின் கல்வி, பொருhளாதாரம், உள்ளிட்ட அனைத்தும் பின்நோக்கச் செல்கின்றது என கடந்த காலங்களில் அரசியலிலிருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் இதுவரை காலமும் எதனை வளர்த்தார்கள் எப்பதை அவர்களிடத்தில் கேட்கவேண்டும். அவர்கள் தாங்கள் தாங்களாகவே சொத்துக்கள் சேர்த்ததுதான் மீதியாகும். குடந்த காலங்களில் தவறு விட்டவர்களை மக்கள் இம்முறை தேர்தலில் தகுந்த பாடங்களை வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவைப் படுடுகின்றது. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் எமது தமிழ் தேசியக் கூட்டணி அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment