
மேற்படிக் கூட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனை எருவில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் பாராட்டி கௌரவித்துள்ளனர்.
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அவதானித்து, பொதுமக்களுக்கு வினைத்திரனான சேவைகளை ஆற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களை மந்த்ரி.LK எனும் இணையத் தளமானது தரவரிசைப்படுத்தி அப்பட்டியலினை அண்மையில் வெளியிட்டதோடு, அவர்களுக்கான பதக்கங்களையும், நினைவுச் சின்னங்களையும் வழங்கியிருந்தது..
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவும், இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை 103 விவாதங்களுக்கும், 43 ஒத்தி வைக்கப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல விடங்களுடன் தனியாள் பிரேரணைகளையும் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment