காட்டு யானைப் பாதுகாப்பிற்கு வைத்த சட்டவிரோத மிசாரத்தில் சிக்குண்டு உறவினர்கள் இருவர் மரணம் - மட்டக்களப்பில் சம்பவம்.
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாணன்மையை பாதுக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் வேளாண்மை காவலில் இருந்த உறவினர்களான இரு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய முனிச்சாமி தங்;கையா , மற்றும் 7 பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய மச்சான் உறவு மறையான இரு விவசாயிளே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர்
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சம்பவதினமான வியாழக்கிழமை இரவு சென்றுள்ளனர் இந்த நிலையில் வயல் பகுதியில் காட்டு யானைகளின் பாதுகாப்பிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சார வேலியை அமைத்துள்ளனர்.
அந்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |
 |
Add caption |
0 Comments:
Post a Comment