நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் நிலைப்பாடு.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம்
சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி
தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கல்முனை பகுதியில் நேற்று மதியம் தனியார்
விடுதி ஒன்றில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அனந்தி சசிதரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு ஒருவரின் மனைவிதான்.
அதை நாங்கள் முற்றுமுழுதாக மறுக்கவில்லை. அனந்தி சசிதரன் ஒரு காலத்தில் தேர்தலில் போட்டியிடும்
போது அவரை நாங்கள் மலைபோல் நம்பியிருந்தோம். ஆனால் தற்போது அது எங்களுக்கு பனிபோல்
ஆகிவிட்டது.
இவ்வாறானவர் இம்முறையும் எங்களை குறிவைத்து தேர்தலில் வெல்ல
முடியும் என நம்பியுள்ளாரா என எங்களுக்கு தெரியவில்லை. தவிர எங்களது போராட்டம் எந்தவித
அரசியல் நோக்கத்திற்காகவோ எந்தவித அரசியல் வாதிகளையோ சமப்படுத்தி இணைத்துக்கொள்ள முடியாது.
எந்தவித அரசியல் வாதிகளுக்கும் துணைபோவதுமில்லை என்பதை இவ்விடத்தில்
தெரிவிக்க விரும்புகின்றேன். இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்
எம்.ஏ. சுமந்திரன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை.
அவர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக முன்னாள் ஜனாதிபதியுடன்
பேசியிருப்பதான தகவல் எதுவும் இதுவரை நாங்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதை தெளிவு படுத்துகின்றோம்
எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment