12 Jun 2020

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு.

SHARE
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு.
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் கீழ் களுவாஞ்சிகுடி கிராமத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடு ஒன்று பயனாளியிடம் வெள்ளிக்கிழமை (12) உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், மாவட்ட செலயக உததித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பு.சசிகலா, மற்றும் தெழில் நுட்ப உத்தியோகஸ்த்தர் அ.மைதவிழி, உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன்….

ஆரம்பத்தில் மாவட்ட மட்டத்தில் தொகுதிக்கு ஒரு வீடு என்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 வீடுகள் ஆரம்பிக்கப்பட்டன அதிலே முதலாவதாக அதாவது 45 நாட்களுக்குள் இந்த வீடு முற்று முழுதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மார்ச் – 31 ஆம் திகதி கையளிக்கப்படவிருந்தன. கொரோனா அச்சம் காரணமாக தவிர்க்க முடியாத காரணத்தினால் இது பயனாளியிடம் கையளிக்கப்படவில்லை. ஆதனாலும் எமது தலைமைக் காரியாலயத்தின் உத்தரவுக்கமைய தற்போது இந்த வீடு உரிய பயனாளியிடம் கையளிக்கப்படுகின்றது.  

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற ஜனாதிபதி அவர்களின் திட்டத்தின்கீழ் பிரதமர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் நடளாவிய ரீதியில் 14020 கிராமங்களிலும், அமுல்ப்படுத்தப்படுகின்றது. என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் என்ற திட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் கோவில்போரதீவு, பட்டாபுரம் ஆகிய இடங்களிலும் நிருமாணிக்கப்பட்ட வீடுகள் வெள்ளிக்கிழமை உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 




















SHARE

Author: verified_user

0 Comments: