மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் பொங்கல் விழா.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (24) பெரியகல்லாறு கடல் நாச்சியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
பெரியகல்லாறு ஆயுள்வேத வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள வயல் வெளியில் பாரம்பரிய அறுவடை நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் பெரியகல்லாறு பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வாத்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து கடல் நாச்சி அம்மன் ஆலயம் வரை பண்பாட்டுப் பவனி இடம்பெற்றது.
பின்னர் அங்கு அறுவடை செய்த உப்பட்டியை பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிpல், கொண்டு சென்று, தடிகளைக் கொண்டு கையினால் அடித்து, அதிலிருந்து வந்த நெல்லை அவுரி கட்டி அதிலே ஏறி நின்று தூற்றி, சுளகினால் புடைத்து, பின்னர் அதனை மர உரலில் இட்டு கையினால் பெண்கள் உலக்கை ஏந்தி குற்றி, அந்த புத்தரிசியை பானையிலிட்டு பெங்கல் பொங்கி பூஜைககள் இடம்பெற்றன.
பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமமட்ட பொது அமைப்புக்கள் இதன்போது வரிசையாக தென்னை, வைக்கோல், கொண்டு கொட்டகைகள் அமைத்து, வண்ண நிற மண்பானைகளில், பொங்கள் பொங்கினர். இதன்போது ஒவ்வொரு சக்கரை, பால், கிழங்கு, தேன், எள், நவதானியப் பொங்கலென, வெவ்வேறு வித இரசனையுடன் பொங்கப்பட்டன.
இந்நிலையில் தமிழர்கள் பாரம்பரியமாக வழிபாடு செய்துவரும் பசுவுக்கும் கோமாதா பூஜையும் இடம்பெற்றது. தொடர்ந்து இதன்போது இந்து, கிறிஸ்த்தவ, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதே செயலாக உயர் அதிகாரிகள், பிரதேச பெரியோர்கள், பொது அமைப்பக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணர்வகள் என ஏரானமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment