5 Dec 2019

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்களை யோகேஸ்வரன் எம்.பி நேரில்சென்று பார்வையிட்டு உதவி வழங்கிவைப்பு.

SHARE
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்களை யோகேஸ்வரன் எம்.பி நேரில்சென்று பார்வையிட்டு உதவி வழங்கிவைப்பு.
மட்டக்களப்பில் பரவலாக பெய்தவரும் தொடர் அடைமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் நேரடியாக சென்று பார்வையிட்டு வருவதோடு, அவசர கால அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு  தேவையான மக்களுக்களுக்கு அவசரதேவைக்கு உரிய பொருட்கள்  வழங்கி வரகின்றார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னியின் கோரிக்கையை ஏற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தன்னாமுனை மற்றும் சிவபுரம்  இடைதங்கல் முகாம்களில் வசித்த 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை தேவை பொருட்கள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் அகில இலங்கை இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் அம்மக்களுக்கான அடிப்படை தேவையான பொருட்களை வியாழக்கிழமை (05) வழங்கி வைத்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: