மட்டக்களப்பு தாழங்குடாவில் ஒருங்கிணைந்த பழச் செய்கையின் அறுவடை நிகழ்வு திங்கட்கிழமை 23.10.2017 இடம்பெற்றது.
தாழங்குடா ஜோசா பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட பழமரச் செய்கையில் 6 மாத கால நல்லின சுநன டுயனல பப்பாசிகள், வுழுஆ நுதுஊ இன 3 வருடத்தில் சிறந்த பழங்களைத் தரக்கூடிய மா மரங்கள் நல்ல விளைச்சலைக் கண்டிருந்தன.
இதனை முன்மாதிரியாகக் கொண்டு பிரதேசத்திலுள்ள பழமரச் செய்கையாளர்கள், மற்றும் எதிர்கால விவசாய உற்பத்தியாளர்களாக வரக் கூடிய மாணவரக்ளுக்கு விழிப்பூட்டுவதற்காக இந்த அறுவடை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பண்ணைகளில் ஒருங்கிணைந்த பயிர்ச் செய்கை முறை, நடுகை, பராமரிப்பு, அறுவடை பற்றியும் குடும்ப மற்றும் சமூக பொருளாதார, ஆரோக்கிய வளர்ச்சி பற்றியும் விழிப்புணர்வூட்டப்பட்டது.
மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள விவசாய பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதாகரன், விவசாய உதவிப் பணிப்பாளர் என்.எம்.எம். சலீம், ஆரையம்பதி விவசாயப் போதனாசிரியர் முபீதா றமீஸ், பண்ணையாளர் என். ஜோதிராசா உட்பட தாழங்குடா விநாயகர் வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்கள் பிரதேச விவசாயிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment