மகிழடித்தீவில் சாதனையாளர் பாராட்டு விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா இன்று(30) நடைபெற்றது.
இதன்போது, கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைகழகம், கல்வியல்கல்லூரிக்கு தெரிவானவர்கள், கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் சித்தியெய்தவர்கள், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், வகுப்பு ரீதியாக முதன்நிலை பெற்றவர்கள், பாடசாலையின் முதன்மை மாணவர்கள், விளையாட்டு, ஆங்கில, தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டி பரிசில்வழங்கி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், சாதனையாளர்களை உள்ளடக்கிய மகிழமுதம் சஞ்சிகையும் இதன்போது வெளியீடு செய்யப்பட்டது. இதன் முதல்பிரதியை பாடசாலையின் அதிபர் பொ.நேசதுரை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன. பாடசாலையின் அதிபர் பொ.நேசதுரை தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், குறித்த கிராமத்தில் இருந்து கல்வி கற்று உயர்நிலையில் இருக்கின்றவர்களும், அயல்பாடசாலைகளின் அதிபர்கள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழையமாணவர்கள், பெற்றார்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு குறித்த பாடசாலை அமைந்துள்ள கல்வி வலயத்தில் இருந்து எந்தவொரு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிராமை விமர்சனத்தினையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பித்தக்கது.
0 Comments:
Post a Comment