மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியில் “வித்தியாதீபம்" செய்திமடல் வெளியீடு.
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் “வித்தியாதீபம்" செய்திமடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் சிரேஷ்ட துறைசார் பொறுப்பு விரிவுரையாளருமான எம்.சி.ஜுனைட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - தாளங்குடா கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை 30.11.2019 இந்நிகழ்வு நடைபெற்றது.
வித்தியாதீபம் செய்தி மடல் கல்லூரியின் பீடாதிபதி கே.புண்ணியமூர்த்தியினால் முதல் பிரதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய கல்வியற் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்களின் எழுத்தாற்றல்களை மேம்படுத்தும் வகையிலும் ஆக்கபூர்வ சிந்தனைகசளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அதன் மூலமாக ஆசிரிய மாணவர்கள் கற்பிக்கப்போகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்தச் செய்திமடல் வெளியிட்டு வைக்கப்பட்டதாக அக்கல்லூரியின் கல்வியியலாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment