சமகாலப் போக்குக்கு ஈடுகொடுத்து பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும் இல்லையேல் நெறிப்படுத்தலில் சறுக்கல் ஏற்படும் வளவாளர் எஸ். சக்திவேல்.
சமகாலத் தொழிநுட்ப வளர்ச்சிக்கும் தொடர்பாடல் புரட்சிக்கும் ஈடுகொடுத்து பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும், இல்லையேல் ஒன்றுமறியாதவர்களாக இருந்தால் நெறிப்படுத்தலில் சறுக்கல் ஏற்படும் என துறைசார்ந்த வளவாளர் எஸ். சக்திவேல் தெரிவித்தார்.
புகலிடம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் தமிழ் அமுஸ்லிம் சமூக சமாதான செயற்பாட்டாளர்களக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முரண்பாட்டு நிலைமாற்றத்திற்கான இலகுபடுத்தல் (குயஉடைவையவழைn கழச ஊழகெடiஉவ வுசயளெகழசஅயவழைn) எனும் பயிற்சி நெறி ஆரையம்பதி புகலிடம் வள நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 12.11.2019 இடம்பெற்றது.
புகலிடம் நிறுவனத்தின் சமுதாய அடிப்படை புனர்வாழ்வு அலுவலர் இந்திராணி தேவப்பிரியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள், உட்பட தமிழ் முஸ்லிம் சமூக சமாதான செயற்பாட்டு ஆர்வலர்களும் பங்குபற்றினர்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்துரைத்த வளவாளர் எஸ். சக்திவேல், சமகாலப் போக்கில் நவீன தகவல் தொழினுட்ப யுகத்தில் எதுவுமே தெரியாத புரியாதவர்களாக பெற்றோர் இருந்தால் அது தம் பிள்ளைகளை சிறந்த செல்நெறியுடன் வளர்த்தெடுப்பதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை.
அதற்குப் பதிலாக விரும்பியோ விரும்பாமலோ பெற்றோரும் சமகால தகவல் தொழினுட்ப அணுகுமுறைகளினூடேதான் பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டியுள்ளது.
பாட்டினக் கதைகள் சொல்லி நிலாச் சோறூட்ட வேண்டிய கால கட்டம் தற்போது இல்லை. சமகால தகவல் தொழினுட்பப் போக்கிலிருந்து நாம் ஒதுங்கி விடுபட்டுப் போகவோ, வெறுத்தொதுக்கலோ முடியாது என்பதால் அதனூடே பயணித்துத்தான் சவால்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது.
அதுபோலவே, ஆன்மீக வழிகாட்டலும், அறநெறிகளும், சமாதானமும், அஹிம்சையும், வன்முறைக்குப் பதிலாக நன்முறைகளும் இந்த தகவல் தொழினுட்பப் புரட்சிக்கூடாகவே இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத் தேவையுள்ளது.
எனவே, இந்த விடயத்தில் பெற்றோரும், சமயத் தலைவர்களும், சமாதான விரும்பிகளும், சமூக ஆர்வலர்களும் பின்னிற்கக் கூடாது. சமகால தகவல் தொழினுட்ப அறிவுகளை முடிந்தளவு கற்று தம் இளம் சமுதாயத்தினரை அறிவூட்ட வேண்டும்.
அப்பொழுதுதான் அவர்களது செல் நெறி சிறந்ததாக இருக்கும்”
இந்த விடயத்தில் முதலில் முன்னுதாரணம் மிக்க பாத்திரங்களாக சமயத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் பெற்றோரும் திகழ வேண்டும். பழைய போக்கிலே போக வேண்டும் என்று பெற்றோரும் சமயத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் அடம்பிடித்தால் இளைய சமுதாயத்தினருடனான இடைவெளி அதிகரித்து விடும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அது மிக ஆபத்தானது” என்றார்.
0 Comments:
Post a Comment