ஜனாதிபதித் தேர்தலில் சகல மக்களும் எல்லாப் பிரதேசங்களிலும் மிகுந்த ஆர்வத்துடன் அமைதியான முறையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்து வருகின்றதாக தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
கடந்த நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் இருந்து இதுவரையும் 22 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் பதிவாகியுள்ளது. இதில் பாரதூரமான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. இம் முறைப்பாடுகளில் உண்மைக்குப் புறம்பான முறைப்பாடுகளும் பதிவாகியிருந்தமை அவதானிக்க முடிந்தது.
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் உள்ளது. முதலில் 5.20 மணியளவில் அஞ்சல் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். ஏனைய வாக்கெண்ணும் பணிகள் 7.00 மணியளவில் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment