ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுக்கான செயலமர்வு செவ்வாய்க்கிழமை 08.10.2019 ஆரையம்பதி விதாதா வள நிலைய மண்டபத்தில் மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றிய இணைப்பாளர் சோமா சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றது.
பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற அந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இணைப்பாளர் சோமா சிவசுப்பிரமணியம், இந்த தகவல் தொழினுட்ப நூற’றாண்டில் மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான முக்கிய விடயமாக தகவல் உரிமை மாறியிருக்கின்றது.
காலத்தின் தேவைக்கேற்ப இது முக்கியத்துவம் பெற்றுள்ளதால் தகவல் உரிமைகள் பற்றி பிரணைகள் அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.
மக்களால் ஆளப்படுகின்ற இந்த சட்டத்தை உயிரூட்டி அமுல்படுத்துவது மக்களின் கைகளிலேயே உள்ளது.
நீடித்து நிலைக்கக் கூடிய அபிவிருத்திக்கும், ஊழலற்ற நிருவாகத்திற்கும் நல்லாட்சியின் குணாம்சங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாட்டுப் பிரஜைகளுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இதனை மக்கள் சிறந்த முiறியில் பயன்படுத்தி தங்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச செயலக மகளிர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர். ஜீவராணி, மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றிய வெளிக்கள அலுவலர் பிரபாகரன் லூர்த்துமேரி, பிரதேச கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்;, மகளிர் செயற்பாட்டாளர்கள், பிரதேச செயலக அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment