மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவ்வாய்க்கிழமை (08) மாலை களுதாவளைக் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நண்பர்களாக இணைந்து கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர். இவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும்போது அருகில்நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.
பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர் உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த கடற்படையினரால் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு கடலில் அள்ளுண்டுபோன இளைனை மீனவர்களும், உறவினர்களுமாக கடலில் தேடி வருகின்றனர்.
இவ்வாறு கடலில் காணாமல் போனவர் களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரம் டிலான் என தெரியவந்துள்ளது.
0 Comments:
Post a Comment