16 Jun 2019

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீரலியால் வழங்கி வைப்பு.

SHARE
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீரலியால் வழங்கி வைப்பு.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (15) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வைத்து முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீரலியால் வழங்கி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீரலி அவர்களின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கண்னண் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு தையல் பயிற்சி நெறியை முடிந்தயுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

இதன்போது 2 தையல் பயிற்சி நிலையங்களில் 6 மாத தையல் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த 32 யுவதிகளுக்கு 12 இலட்சம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு இணைப்பாளர் லோகநாதன், அமைப்பாளர் கண்னண், மகளிர் இணைப்பாளர் மீனா, அமைப்பாளர் ஜெகன், விஜயன் பனை அபிவிருத்தி அதிகார சபை  மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: