16 Jun 2019

புணரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தலும், யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும்.

SHARE
புணரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைத்தலும், யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சுவட்டை புளியடி வீதி கம்பரெலிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்டு சனிக்கிழமை (15) அது மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிலையில் சனிக்கிழமை (15) போரதீவுப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட 3 தையல் பயிற்சி நிலயங்களில் 6 மாத கலம் தையல் பயிற்சியை நிறைவு செய்த 48 யுவதிகளுக்கும் இதன்போது தையல் இயந்திரங்கள் வெல்லாவெளி கலாசார நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.  

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி  அவர்களின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வ.கண்னண் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி  மற்றும் அவரது இணைப்பாளர் லோகநாதன், அமைப்பாளர்களான வ. கண்னண், ஜெகன், ருத்திரன் மகளிர் இணைப்பாளர் மீனா, மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.














SHARE

Author: verified_user

0 Comments: